சனி, 13 நவம்பர், 2010

ஆசியா விளையாட்டுப்போட்டியில் கிரிக்கெட்

ஆசியா விளையாட்டுப்போட்டியில் கிரிக்கெட்டை புதிதாக சேர்த்துள்ளனர்.ஆனால் இந்திய கிரிக்கெட் அணி இதில் கலந்து கொள்ளவில்லை ஏனெனில் இந்திய அணி நியூசிலந்துடன் டெஸ்ட் தொடரில் விளையடுகிறது.


                                                கிரிக்கெட் வாரியத்தின் செயல்
இந்திய அணியில் 16 வீரர்கள் மட்டும் தான் உள்ளனரா?
இந்திய A அணியை அனுப்பலாமே?
இது BCCI க்கு தெரியாதா?

வெள்ளி, 8 அக்டோபர், 2010

கிரிக்கெட் பற்றி

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு கிரிக்கெட் பற்றி கவலையில்லை. பணம் குவிப்பதில் மட்டுமே அது கவனம் செலுத்தி வருகிறது. இப்படி பிசிசிஐ-யை விமர்சித்திருப்பது கிரிக்கெட் விளையாட்டை பிடிக்காதவர்களோ அல்லது பிசிசிஐ நிர்வாகிகளுக்கு எதிரானவர்களோ அல்ல. இந்திய வருமான வரித்துறை தான் இப்படி ஒரு விமர்சனத்தை தனது உத்தரவு ஒன்றில் தெரிவித்துள்ளது.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் கிரிக்கெட் விளையாட்டை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது என்ற அடிப்படையில் அதற்கு வருமான வரி விலக்கு அளிக்கப்பட்டு வந்தது.
ஆனால் கடந்த டிசம்பர் 30ம் தேதி வருமான வரித்துறை வெளியிட்டுள்ள உத்தரவு ஒன்றில் பிசிசிஐக்கு வருமான வரி விலக்கு அளிக்க மறுத்துள்ளது. பிசிசிஐ 2006-07ம் நிதியாண்டில் 275 கோடி ரூபாய் நிகர வருவாய் ஈட்டியுள்ளது என்றும், வரி மற்றும் அபராதம் சேர்த்து 120 கோடி ரூபாய் செலுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
கிரிக்கெட் மேம்பாட்டிற்காக செயல்பட வேண்டிய பிசிசிஐ, 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளை நடத்துவது, கட்டணம் வாங்கிக் கொண்டு பயிற்சி நிறுவனம் நடத்துவது போன்ற வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடத் தொடங்கிவிட்டது என்றும் வருவமான வரித்துறை குற்றம்சாட்டியுள்ளது.
கிரிக்கெட் மேம்பாட்டிற்காக அடிப்படை கட்டுமான வசதிகளை மேம்படுத்துவது அல்லது புதிய மைதானங்கள் அமைப்பது போன்ற எந்த முயற்சியையும் பிசிசிஐ மேற்கொள்ளவில்லை என்று கூறியுள்ள வருமான வரித்துறை, பிசிசிஐ வர்த்தகமயமானதற்கு ஐபிஎல் ஒரு உதாரணம் என்று கூறியுள்ளது.
வருமான வரித்துறையின் இந்த உத்தரவு குறித்து கருத்து தெரிவிக்க பிசிசிஐ செயலாளர் சீனிவாசன் மறுத்துவிட்டார். எனினும் இதனை எதிர்த்து மேல் முறையீடு செய்யப் போவதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
                                                                                                                                               --நிகழ்வுகள்--